பலதும் பத்தும்:- 22,04,2025 - கட்டுநாயக்க, ஆடியம்பளம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தடகள சாம்பியன் போட்டியில் தருஷி அபிஷேகா

கட்டுநாயக்க, ஆடியம்பளம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது இன்று (22) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க, ஆடியம்பலம பகுதியில் வியாபாரி ஒருவரை துப்பாக்கியால் சுட முயன்றதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் ஒருசந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 நாட்கள் சுற்றுப் பயணம்
4 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரதுகுடும்பத்தினர் டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் இந்தியப் பிரதமர் வரவேற்று கலந்துரையாடியுள்ளார்.
தடகள சாம்பியன் போட்டியில் தருஷி அபிஷேகா
2025 ஆசிய U18 தடகள சாம்பியன் போட்டியில், இலங்கையை சேர்ந்த தருஷி அபிஷேகா 800 மீட்டர் ஓட்டத்தில்தங்கம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். குறித்த போட்டியில் இலங்கை 8 பதக்கங்களை பெற்று ஆசியாவில்9வது இடத்தில் உள்ளது.
மேர்வின் சில்வா
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே மாதம் 5ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மஹர நீதவான்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைத்ரிபால சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சில நிமிடங்களுக்கு முன்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி்லிருந்துவெளியேறியுள்ளார். ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி வழங்கியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க மைத்ரி 7 மணி நேர வாக்குமூலம்அளித்த பிறகு, குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திலிருந்து வெளியேறினார்.