Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

அஞ்சலி செலுத்தப்பட்டடு அத்துடன், அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அன்னை பூபதியின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம்(19) யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் அகவணக்கம் செலுத்தப்பட்டு, அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன், அன்னை பூபதி தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய முன்றலில் இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கப்பட்டது 

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவின் ஏற்பாட்டில் தேராவில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில், தியாகதீபம் அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது 

நிகழ்வில் பணிக்குழு உறுப்பினர்கள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், மாவட்டக் கிளைப் பணிமனையில் இன்றையதினம் (19) அன்னைபூபதியின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நல்லூர் வட்டாரக்கிளைத் தலைவி குணலக்சுமி குலவீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அருள்செல்வி கனகராசா நினைவுச்சுடரினை ஏற்றிவைத்தார்.

அகவணக்கம், மலர்மாலை அணிவித்தல், மலரஞ்சலி என்பவற்றைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண மேனாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி பிரதேச சபையின் மேனாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், போராளிகள் நலன்புரிச்சங்க உறுப்பினர் செல்வரட்ணம் தனுபன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.