ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் குவிந்த பக்தர்கள்..!
.
விருதுநகர்: வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை , பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில், 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று அமாவாசை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஏராளமான பக்தர்கள் சதுரகிரி கோவிலில் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 6 மணி முதல் 12 வரை மட்டுமே அனுமதி, கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது , இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.