Breaking News
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா?
.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க தீர்மானித்து தடை உத்தரவு பிறப்பித்தால் தேர்தல் திகதி அறிவிப்பை நிறுத்தி வைக்க நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் மற்றும் வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் எதிர்வருத் ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தன்னிச்சையாக கிடைக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் 16 மற்றும் 21 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும், வேட்புமனுக்கள் கோரப்பட்ட நாளிலிருந்து 4-6 வாரங்களுக்குள் வாக்களிப்பு நடத்தப்படும் எனவும் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க கூறியுள்ளார்.
மேற்படி மனுவின் பிரகாரம் தேர்தல் திகதியை அறிவிக்க உயர் நீதிமன்றத்தால் தடை எதுவும் விதிக்காவிட்டால், தடையின்றி தேர்தலை நடத்த முடியும் என்றும், செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.