Breaking News
30 வருடமாக கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயம்; இன்று முதல் பக்தர்கள் செல்ல அனுமதி
.
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த 30வருட காலங்களாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள்ளே கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமைவாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்திற்க்கு சென்று மக்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.