Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

யாழில் குற்றச் செயல்களை கண்டுகொள்ளாத பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு

.

 

யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சூழல் ஒன்றிற்கு அகப்பட்டுள்ளதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள, சிறீதரனின் இல்லத்தின் முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத , ஒன்பது பேர் முகத்தையும், மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்து, வாள்களை சுழற்றியவாறு வீதியால் செல்லும் காணொளி ஒன்று வெளியாகிருந்தது.

ஆகவே தனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடிய குழுவினர் தொடர்பாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் ஒன்றை வழங்கவுள்ளதாக சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.