Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு.

திஸாநாயக்க - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலுடன் அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் .

பொதுத் தேர்தல் ஊடாக அரசாங்கத்தைஅமைக்க பெரமுன கவனம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலுடன் அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மே தின கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான கருத்துக்கள் மாத்திரம் வெளிப்பட்டதே தவிர தொழிலாளர்களின் உரிமை பற்றி எந்த அரசியல் கட்சி மேடைகளிலும் பேசப்படவில்லை.மே தின கூட்டம் அரசியல் கூட்டமாக மாற்றமடைந்துள்ளமை கவலைக்குரியது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பலமுறை முன்வைத்துள்ள போதும் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை.அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்தும் சூழல் காணப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு.ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் ஊடாக அரசாங்கத்தை ஸ்தாபிப்பது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் பொறுப்பு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது.கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளுமாறு கட்சியின் தலைவர்கள் மற்றும் தேசிய அமைப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ இவ்விடயம் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.கட்சியில் இருந்து விலகிச் சென்ற சிரேஷ்ட உறுப்பினர்களை மீண்டும் இணைத்துக் கொண்டு ஒன்றிணைந்து செயற்பட்டால் பொதுஜன பெரமுன தலைமையில் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கலாம் என்றார்.