Breaking News
வாலிபம் சிதைந்து தசாப்தம் மூன்றாக முறித்த சிறகுடன் வலி தோய்ந்த இனத்தின் சிறைப்பறவை சாந்தன்!
கோமியம் குடிக்கும் இந்தியம் கோவணம் தொலைத்திட்ட நாள்!

“வாலிபம் சிதைந்து முறித்தெடுத்த சிறகுடன்
வலி தோய்ந்த இனத்தின் சிறைப்பறவை!”
ஈழத்தமிழரின் விஷ முள்ளு இந்தியம்! ஈனத்தின் உச்ச வஞ்சனையின் நச்சுக் கூடு!
ஈழ இனத்தினை வாழ விடாது இந்தியம், இறங்கி வந்து இராமன் சொன்னால் அன்றி!
வக்கிர வேட்டையில் இரையான உயிர் பல! வரலாற்றில் தொடரும் சாத்தானின் வேதம்!
வலிந்து சாந்தனின் உயிரையும் பறித்தது! வஞ்சனையால் இதழ் ஒன்று உதிர்ந்தது
வயோதிப மலர்காம்பின் தொடுகை இன்றி! தசாப்தம் மூன்றாக முறித்த சிறகுடன்
வலி தோய்ந்த இனத்தின் சிறைப்பறவை! வலிந்து பறிக்கப்பட்ட இவன் உயிர்
வாழ விடாது ஒரு நாளும் இந்தியத்தை! வாலிப வாழ்வை சிதைத்த சிறைக்கூடம்!
வலி தாங்கியே நீதி மன்றில் இடி தாங்கி வடுக் கொண்ட நெஞ்சுடன் வாடியே தினமும்
வாழ்வை எண்ணி ஏங்கிய இவனின்- சிறை வாசல் சென்றாரா ஈழத்து அரசியல் தரகர்கள்?
கட்குழிக்குள் எப்போதும் பெரும் ஏக்கம் கடல் தாண்டி தன் மகனை கட்டியணைத்திட!
கனத்த இதயத்துடன் கனவு பல ஏந்தி காத்திருந்தாள் ஒரு நாள் வருவானென்று!
கருவாய் சுமந்த தன் ஆசைப் பிள்ளையை கட்டிலிலே பிணமாய் பார்த்து கலங்கினாள்!
வாய்திறந்து அம்மா எனை கூப்பிடு என்று வார்த்தை அடைக்க அவள் இதயம் அழுதது!
நீதி தேவதைக்கு கண்கள் தைத்து தருமம் செத்திட்ட நாள்!
கோமியம் குடிக்கும் இந்தியம் கோவணம் தொலைத்திட்ட நாள்!
கற்காலத்தினை மனிதம் தொட்டு காந்தீயம் மீண்டும் மரணித்த நாள்!
- பரிதிவளவன்