Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தி கோட் படத்தை விஞ்சிய ரஜினிகாந்தின் வேட்டையன்; டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனை

.

மொத்த டிக்கெட் விற்பனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இந்நிலையில், படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வதில், நடிகர் விஜயின் தி கோட் திரைப்படத்தின் சாதனையை இது மிஞ்சியுள்ளது.வேட்டையனுக்கான டிக்கெட் முன்பதிவு கோட் டிக்கெட்டுகளை விட 54 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.புக் மை ஷோ தளத்தில் நேற்று (அக்டோபர் 7) டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 1.40 லட்சத்துக்கும் அதிகமான வேட்டையன் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.தி கோட், இந்தியன் 2 மற்றும் ராயன் படங்களை விட வேட்டையன் படத்திற்கான டிக்கெட் விற்பனை அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமாக அனைத்து தளங்களிலும் சேர்த்து தற்போது வரை, வேட்டையன் திரைப்படம் தமிழில் மட்டும் 3.1 லட்சம் டிக்கெட்டுகள் விற்று ரூ.6.37 கோடி வசூலித்துள்ளது எனக் கூறப்படுகிறது.இது தவிர, தெலுங்கு மற்றும் இந்தியிலும் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் மொத்தமாக 3.36 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை முன்பதிவு மூலம் இந்தியாவில் ரூ.6.64 கோடி வசூலித்துள்ளது.முன்னதாக ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் முன்பதிவு மூலம் மட்டும் 8.77 லட்சம் டிக்கெட்டுகளுடன் ரூ.18 கோடிக்கும் மேல் வசூலித்தது.இந்நிலையில், வேட்டையன் படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு நாள் இருப்பதால், படத்திற்கான முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.