Breaking News
சம்பந்தன் மறைவு; கிளிநொச்சியில் அரைக்கம்பத்தில் பறந்த தமிழரசுக் கட்சியின் கொடி
.
மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று(01) காலை தமிழரசுக் கட்சியின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு சம்பந்தனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.