Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வலி. வடக்கில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க முயற்சி

,

யாழ்ப்பாணத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியினை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்களின் காணிகள் மக்களுக்கே எனவும் , விரைவில் முப்படைகளின் வசமுள்ள தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிப்போம் என ஜனாதிபதி முதல் தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நகுலேஸ்வரம் கிராம சேவகர் பிரிவில் உள்ள 2 ஏக்கர் காணியினை , கடற்படையின் ரேடர் அமைக்க சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பகுதியில் கடற்படையினர் சுமார் 300 ஏக்கர் தனியார் காணியினை அபகரித்து வைத்துள்ளனர். அவற்றில் சில காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் தெரிவித்துள்ள போதிலும்  இன்னமும் அக்காணிகள் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் காணியினை உத்தியோகபூர்வமாக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.