இந்தியா, நேபாளத்திற்கு பிறகு அதிக இந்து மக்கள் சதவீதம் உள்ள நாடு எது? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!
சைவத்தை விழுங்கிய இந்து! ஆங்கிலேயன் பெற்று வளர்த்து பெயர்வைத்த குழந்தை இந்து இந்தியா!!

சையமும் தமிழும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. குமரி (குமரிக்கண்டம்) முதல் இமயம் வரை சிவனுடைய ஆட்சி, ஆளுமை, தத்துவம், வழிபாடு பரந்திருந்தது.
இந்தியா, நேபாளத்திற்கு பிறகு அதிக இந்து மக்கள் சதவீதம் உள்ள நாடு எது? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!
அதிக இந்து மக்கள் சதவீதம் உள்ள நாடுகளின் பட்டியலில் நேபாளம் முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது
உலக அளவில் அதிக இந்தியர்களை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. மிகவும் பழமையான மதம் எனக்கூறப்படும் இந்து மதத்தை உலக அளவில் சுமார் 15% மக்கள் பின்பற்றுகிறார்கள்.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவில் உள்ளவர்களில் 79.8% மக்கள் இந்து மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளனர்.
ஆனால் அதிக இந்து மக்கள் சதவீதம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம் தான்.
உலகில் அதிக இந்து மக்கள் சதவீதம் உள்ள நாடு நேபாளம் தான். நேபாளத்தில் சுமார் 81.19% மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். ஆனால் இந்த பட்டியலில் உள்ள 3ஆவது நாடு எது தெரியுமா?
இந்த பட்டியலில் 3ஆவதாக உள்ள நாடு மொரீஷியஸ் தான். இது ஆப்பிரிக்கா கண்டத்தின் அருகில் உள்ள ஒரு தீவு ஆகும். பிரிட்டிஷ் காலத்தில் அங்கு பணிபுரிவதற்காக இந்தியாவிலிருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அவர்கள் அங்கேயே தங்கிவிட்டதால், தற்போது உலகில் அதிக இந்து மக்கள் சதவீதம் உள்ள நாடுகளின் பட்டியலில் மொரீஷியஸ் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டில் சுமார் 47.9% மக்கள் இந்து மதத்தை பின்பற்றுபவர்களாக உள்ளனர்.
மேலும் உலகில் அதிக இந்து மக்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், நேபாளம் இரண்டாவது இடத்திலும், வங்கதேசம் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.