Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22 நாடுகள் சேர்ந்து மௌனிக்கச் செய்திருந்தன - தவிசாளர் மதிமேனன்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் நடைபெற்றது.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22 நாடுகள் சேர்ந்து எமது மௌனிக்கச் செய்திருந்தன. மீண்டும் நாம் அகிம்சை ரீதியான போராட்டத்திலேயே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். நாட்டிலே சம அந்தஸ்துடன் வாழ்வதற்காக இவ்வாறான போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.என மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது உரிமைக்காகவும் தமிழ் மக்களின் இருப்புக்காகவும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் முகமாக அந்த மக்கள் இறுதி யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் உப்பில்லா கஞ்சியை அருந்தி இறந்தவர்கள்போக ஏனையர்வர்கள் அவர்களது உயிர்களை காப்பாற்றி இருந்தார்கள். அவ்வாறான மக்களை நாங்கள் வருடம் தோறும் அந்த மக்கள் எவ்வாறு வேதனைகளை அனுபவித்தார்களோ எவ்வாறு கஞ்சி அருந்தி அவர்களது உயிர்களை காப்பாற்றினார்களோ, அந்த நினைவு நாளை வருடம் தோறும் நாம் மக்களுக்கும்ம், எமது இளம் சமுதாயத்தினருக்கும் எடுத்தியம்பி கஞ்சிக வழங்கி நினைவுகூர்ந்து வருகின்றோம்.

2009 மே 18 திகதி முள்ளிவாய்க்காலில் பேரவலத்தின் மத்தியில் இலட்சக்கணக்கான மக்கள் உயிர்களை இழந்து இருந்தனர். இந்த நிலையிலே வடகிழக்கிலே தமிழர்களாகிய நாங்கள் இலங்கையிலே ஒரு சிறுபான்மை இனமாக இருந்தாலும் எங்களுக்கும் இலங்கையிலே சமமான உரிமைகளும், சமமாக மதிக்கப்படுகின்ற தன்மையும், ஏனைய சமூகத்தின் மத்தியில் சமமாக நாங்களும் இந்த நாட்டிலே வாழுகின்ற பிரஜைகள் என்ற அடிப்படையில்தான் 2009இல் எமது மக்கள் இன்னுயிர்களை தியாகம் செய்திருந்தனர். உரிமைக்காக போராடி இருந்தார்கள்.

ஆரம்பத்தில் அஹிம்மை ரீதியாக எமது உரிமைக்காக இலங்கை தமிழரசி கட்சி போராடி இருந்தது. அதற்காகத் தமிழ் மக்களுக்கு எதுவித தீர்வுகளும் கிடைக்கப்பெறாத நிலையில் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடிய இனம் தமிழினம்.Beaches & Islands
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை 22 நாடுகள் சேர்ந்து எமது மௌனிக்கச் செய்திருந்தன. மீண்டும் நாம் அகிம்சை ரீதியான போராட்டத்திலேயே தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். நாட்டிலே சம அந்தஸ்துடன் வாழ்வதற்காக இவ்வாறான போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

வடக்கு கிழக்கிலே நில அக்கிரமிப்பு, தொல்பொருள் என பல்வேறு வடிவங்களில் தமிழ் மக்களில் நிலங்களும், மத ஸ்தலங்களும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. முள்ளிவாய்க்காலிலே இவ்வாறானவற்றுக்கு எதிராகத்தான் எமது மக்கள் போராடி முள்ளிவாய்க்காலிலும் மரணித்திருக்கின்றார்கள். அவர்கள் மரணித்து 17 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அந்த மக்களின் உயிர் தியாகங்களை நாம் என்றும் மறக்க முடியாது.

வருங்கால இளைஞர்களுக்கும் இந்த விடயங்களை எத்தி வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
எனவே தொடர்ந்தும் உரிமைக்காக இலங்கை தமிழரசு கட்சி குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும். இவ்வாறான நிகழ்வுகளை எமது அடுத்த தலைமுறைக்கும் ஏத்தி வைக்கும் பணியினையும் நாங்கள் செய்ய செய்து கொண்டிருக்கின்றோம். என அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது முன்னிவாய்க்காலில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்ட அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவ்விடத்திலேயே கஞ்சி காய்ச்சி மக்ளுக்கு வினியோகிக்கப்பட்டன. இதன்போது மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப் பற்ற ஆகிய பிரதேச சபைகளின் உப தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.