Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஈழத்தமிழர் வரலாற்றில் மற்றுமொரு தீர்க்கமான திருப்பம்!

தமிழ்ச் சட்டத்தரணிகளின் பேரவையின் முயற்சியில் ஒரு மிகமுக்கியமான தீர்மானம் தற்போது எட்டப்பட்டுள்ளது!

ஈழத்தமிழர் வரலாற்றில் மற்றுமொரு தீர்க்கமான திருப்பம்! தமிழ்ச் சட்டத்தரணிகளின் பேரவையின் முயற்சியில்
ஈழத்தமிழர் அரசியல் பயணத்தில் வட்டுக்கோட்டை தீர்மானம் (1976) மற்றும் சுதுமலை பிரகடனம் (1987) ஆகியவற்றுக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய ஒரு மிகமுக்கியமான தீர்மானம் தற்போது எட்டப்பட்டுள்ளது! தமிழர் தேசத்தின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை மற்றும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கிய ஒரு புதிய சமூகஒப்பந்தத்தை' (Social Contract) உருவாக்கத் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. 

இந்தத் தீர்மானத்தின் வரலாற்றுச் சிறப்பு என்னவென்றால்..? அரசியல் ஒற்றுமை: 
தமிழ் தேசிய அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட திரு. கஜேந்திரகுமார்பொன்னம்பலம் ( Gajendrakumar Ponnambalam  )  அவர்களும், திரு. எம்.ஏ. சுமந்திரன் அவர்களும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்து வழிமொழிந்துள்ளனர் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வாகும். அடிப்படை உரிமை: தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வாக, வடக்கு - கிழக்கு மாகாணங்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை முன்னிறுத்துகிறது.

சட்டத்தரணிகள் பேரவையின் பங்களிப்பு: மார்ச் 2, 2026 அன்று தமிழ் சட்டத்தரணிகள் பேரவை ஒருங்கிணைத்த இந்தக் கூட்டத்தில், அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் ஒரே குரலில் தமிழர் உரிமையை உரக்கச் சொல்லியுள்ளன. இது வெறும் உடன்படிக்கை மட்டுமல்ல, எம் தேசத்தின் விடுதலைக்கும், நீதிக்கும், கௌரவமான வாழ்விற்குமான புதிய தொடக்கம்!
இதன் மூலம் தான் கொண்ட கொள்கையில் உறுதியுடன் நேர்வழியில் பயணிக்கிறார் என்பதையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளார்.