Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ் மக்களை எச்சரிக்கும் கிபுள் ஓயாத் திட்டம்! பாரிய பின்விளைவுகள் காத்திருக்கின்றன - ப.சத்தியலிங்கம் எம்.பி.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளது. இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்ப்படவேண்டும்

கிபுள் ஓயாத் திட்டம் வவுனியாவில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு பாரிய பின்விளைவை ஏற்படுத்தக்கூடும்  என நாங்கள் சந்தேகப்படுகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர்  ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். 
வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிபுள் ஓயாத்திட்டம் தொடர்பாக வவுனியா பொது அமைப்புக்கள் ஒன்று கூடி கலந்துரையாடல் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்தது. 

வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்,பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். 
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

இத்திட்டம் தொடர்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளது. இந்த விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்ப்படவேண்டும் என்று நாங்கள் மாவட்ட அபிவிருத்திக்கூட்டங்களிலும், அமைச்சர்களிடமும் கேட்டிருந்தோம். 
இந்த திட்டம் வவுனியாவில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக தமிழ்மக்களுக்கு பாரிய ஒரு பின்விளைவை ஏற்படுத்தக்கூடிய திட்டமாக நாங்கள் சந்தேகப்படுகின்றோம்.

கிபுள் ஓயாத்திட்டத்திட்டம் தொடர்பாக எமக்கு இருக்கும் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே நாங்கள் அதனை எதிர்க்கின்றோம். 
இது தொடர்பாக அனைத்து தமிழ்கட்சிகளோடும் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியிருந்தோம். அனைத்து கட்சிகளும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளனர். 

எனவே இன்றையதினம் வவுனியாவில் உள்ள பொது அமைப்புக்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளோம். அவர்களும் இந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளனர். 
வவுனியா வடக்கின் பொதுமக்கள், பொது அமைப்புக்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் நாளையதினம் கலந்துரையாடலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம். ஏற்கனவே எதிர்வரும் 30 ஆம் திகதி காலை நெடுங்கேணி பேருந்து நிலையம் முன்பாக ஒன்றுகூடுவதாக  தீர்மானித்துள்ளோம். 
அது தொடர்பான இறுதி அறிவித்தலை விரைவில் மக்களுக்கு வழங்குவோம். என்றார்.