Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நான்கு சபைகளில் தவிசாளர் பதவிக்கு போட்டி!

உள்ளூராட்சிச் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக எம்முடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளாது தமிழரசுக் கட்சி ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக தமது உறுப்பினர்களைக் களமிறக்குவோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது-

யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் பருத்தித்துறை நகர சபை, வல்வெட்டித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபை மற்றும் ஊர்காவற்றுறைப் பிரதேச சபை ஆகிய நான்கு சபைகளிலும் தவிசாளர் பதவிக்காக எமது கட்சியை சார்ந்தவர்கள் போட்டியிடுவார்கள். ஏனைய சபைகளில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற, தமிழ்த் தேசிய நிலைப்பாடுடன் உள்ள கட்சிக்கு ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் நாம் அவற்றை வழங்குவோம்.

ஆனாலும், உள்ளூராட்சிச் சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக எம்முடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளாது தமிழரசுக் கட்சி ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டுள்ளது.  ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கோரியிருந்தபோதும், பங்காளிக் கட்சிகளுடன் பேசி முடிவை அறிப்போம் என்று கூறியிருந்தார்கள் ஆனால் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என தெரிவித்தார்