Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழில் உணர்வுபூர்வ அஞ்சலி!

அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது இறுதி மூச்சுவரை தூய்மை, எளிமை, நேர்மை, பொதுவுடைமையைக் கடைப்பிடித்து வந்தார் இரா. நல்லகண்ணு

அண்மையில் தமிழகத்தில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அரசியலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனது இறுதி மூச்சுவரை தூய்மை, எளிமை, நேர்மை, பொதுவுடைமையைக் கடைப்பிடித்து வந்த இரா. நல்லகண்ணு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்துள்ளார். அவரின் தன்னலமற்ற தியாக வாழ்வை நன்றியுடன் நினைவிற் கொள்ளும் வகையில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இந்நினைவுகூர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

யாழ்ப்பாணம்- நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.03.2026) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்நினைவுகூர் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சமூக ஆய்வாளர் தெ. மதுசுதனன் ஆகியோர் நினைவுரைகளைத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் செல்திசையுடன் தொடர்புபடுத்தி ஆற்றியிருந்தார்கள்.

பசுமை இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் சோ. சிவநேசனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்ச்சியில் மண்டபம் நிறைந்த பொதுமக்கள் கலந்துகொண்டு இரா. நல்லகண்ணுவின் திருவுருவப் படத்துக்கு சுடர் ஏற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.