Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இரு சீன பெண்கள் 38,000 சட்டவிரோத சிகரட்டுகளுடன் கைது!

.

சுமார் ரூ. 57 இலட்சம் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற சீன நாட்டுப் பெண்கள் இருவர் இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சீனாவைச் சேர்ந்த வர்த்தகப் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் சீனாவின் செங்டு நகரிலிருந்து CA-425விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

பயணிகளுக்கான “Green Channel” ஊடாக இவர்கள் வெளியேற முயன்றபோது, சுங்க அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டனர். இதன்போது இவர்களது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 38,000 சிகரெட்டுகள் அடங்கிய 190 அட்டைப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 
கைது செய்யப்பட்டர்கள் தற்போது அவர்கள் சுங்கக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.