Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இடமாற்றக் கொள்கையை மீறி தீர்மானம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிரடி உத்தரவு!

,

தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை மீறி, நுவரெலியா மாவட்ட கொத்மலை கல்வி வலயத்தில் உள்ள கலாபுவனம் தமிழ் வித்தியாலய கணிதப் பாட ஆசிரியர் ஆர். அசோக்குமாருக்கு வழங்கப்பட்ட கட்டாய இடமாற்றத்தை உடனடியாக நிறுத்துமாறு  ஹட்டன் மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஆர். அசோக்குமார் முதல் நியமன காலத்தில்  குறித்த பாடசாலையில் 2 வருடங்களும் 10 மாதங்களும் மட்டுமே சேவையாற்றியுள்ள நிலையில், தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை சுற்றறிக்கை இல 2007/20-ற்கு முரணான வகையில் அவருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து அவர் மேன்முறையீடு செய்தபோது, கல்வி அதிகாரிகளினாலும் ஆசிரியர் ஆலோசகரினாலும் அவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக மனித உரிமை ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்விடயம் தொடர்பான விசாரணை மே 15, 2026 ஹட்டன் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய பணிப்பாளர் குமுதினி வித்தான மற்றும் ஆணைக்குழு அதிகாரி கே. நளினி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. விசாரணையின் போது, தமக்குத் தேவையானவர்களுக்காக இடமாற்றக் கொள்கைகளை மீறி அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயற்பட முடியாது என ஆணைக்குழுவினர் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்ததுடன், குறித்த கட்டாய இடமாற்றத்தை நிறுத்துவதற்கான கடிதத்தையும் பெற்றுக்கொடுத்தனர்.

இவ்விசாரணையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வே. இந்திரசெல்வன், கி.யோகாராஜா, கொத்மலை இடமாற்ற சபை உறுப்பினர் க.கீர்த்திராஜா, ஹட்டன் இடமாற்ற சபை உறுப்பினர் சி.ரூபன் மற்றும் நுவரெலியா மாவட்ட உறுப்பினர் பெ.பாலா ஆகியோர் முன்னிலையாகினர். கொத்மலை கல்வி வலயப் பணிப்பாளர் சார்பாக நிர்வாக மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் கலந்துகொண்டார்.

அதிகாரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது, ஆசிரியர்களின் உரிமைகளுக்காக இலங்கை ஆசிரியர் சங்கம் என்றும் முன்னிற்கும் என்பதுடன் இதற்காக ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ள சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரசெல்வன், இந்த தீர்ப்பு முழு ஆசிரியர் சமூகத்திற்கும் கிடைத்த  வெற்றியாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.