உக்ரைன் ஜனாதிபதிக்கு ஆலோசகராகும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்.
உக்ரைனில் முக்கிய பதவியில் அமர்த்தப்பட்ட கனடிய முன்னாள் அமைச்சர்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கும் கனடிய முன்னாள் அமைச்சர்!
கனடாவின் முன்னாள் பிரதி பிரதமர் மற்றும் கனடாவின் முன்னாள் அமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலேண்ட் “அடுத்த சில வாரங்களில்” நாடாளுமன்றத்திலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
உக்ரைனின் ஜனாதிபதி வொலோடிய்மிர் ஜெலென்ஸ்கி தனது பொருளாதார ஆலோசகராக நியமித்ததாக அறிவித்திருந்தார்.உக்ரைன் வம்சாவளியாளர் ஃப்ரீலேண்ட், முன்பு கனடாவிற்கு உக்ரைன் புனரமைப்பு சிறப்பு பிரதிநிதி பதவியில் இருந்தார்.
2025 செப்டம்பர் மாதத்தில் அவர் உள்நாட்டுப் பொருளாதார வர்த்தக அமைச்சர் பதவியிலிருந்து விலகி புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“உக்ரைன் இன்று உலகளாவிய ஜனநாயகப் போரின் முன்னணி இடத்தில் உள்ளது. அதனால் நான் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அவர்களுக்கு பணம் பெறாமல் பொருளாதார ஆலோசகராக பங்களிக்க இந்த வாய்ப்பை வரவேற்கிறேன என ஃப்ரீலேண்ட் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதிக்கு ஆலோசகராகும் கனடா நாடாளுமன்ற உறுப்பினர்.
உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்சிக்கு ஆலோசகராவதற்காக, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் கனடாவின் முன்னாள் துணைப் பிரதமர்.
கனடாவின் முன்னாள் துணைப் பிரதமர், கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட். 2013ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியா, நிதி, வெளிவிவகாரங்கள் மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய துறைகளில் அமைச்சராக பணியாற்றியவர் ஆவார்.
இந்நிலையில், கிறிஸ்டியா தனது பொருளாதார மேம்பாட்டு ஆலோசகராக பொறுப்பேற்க இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று சமூக ஊடகமான எக்ஸில் தெரிவித்திருந்தார்.
ஜெலன்ஸ்கியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஒரு நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், இன்னொரு நாட்டின் ஆலோசகராக இருக்கமுடியாது என்றும், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கவேண்டும் என்றும் கனடா எதிர்க்கட்சியினரிடையே குரல்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார் கிறிஸ்டியா.
கிறிஸ்டியா, உக்ரைன் வம்சாவளியினர் என்பதுடன், உக்ரைனில் ஊடகவியலாளராக தனது பணியைத் துவக்கிய அவர், 20 ஆண்டுகள் ஊடகத்துறையில் பெரும் பொறுப்புகள் வகித்தவர் என்பதும், ஜெலன்ஸ்கியின் ஆலோசகராக செயல்படுவதற்காக அவர் ஊதியம் எதுவும் பெறப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் முக்கிய பதவியில் அமர்த்தப்பட்ட கனடிய முன்னாள் அமைச்சர்
கனடாவின் முன்னாள் துணை பிரதமரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலண்டை உக்ரைனின் பொருளாதார மேம்பாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷ்யாவுடன் நடைபெறும் போரின் சூழலில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் ஃப்ரீலண்ட், சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பின்னர் தவறவிடப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால், உக்ரைன் ஒரு வலிமையான பொருளாதார சக்தியாக மாற முடியும் என்று முன்பே தெரிவித்திருந்தார்.
உக்ரைன் தனது உள்நாட்டு தாங்குதிறனை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக செலென்ஸ்கி,கூறினார்.
“முதலீடுகளை ஈர்ப்பதும், பொருளாதார மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதும் தொடர்பாக கிறிஸ்டியா மிகுந்த அனுபவமும் திறனும் கொண்டவர்,” என அவர் குறிப்பிட்டார்.
தூதரக முயற்சிகள் விரைவில் பலனளித்தால் உக்ரைனின் மீட்புக்காகவும், கூட்டாளிகளின் தாமதம் காரணமாக போர் நீடித்தால் எங்கள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும், உக்ரைன் தனது உள்நாட்டு உறுதியை பலப்படுத்த வேண்டும் என செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனிய வம்சாவளியைச் சேர்ந்த ஃப்ரீலண்ட், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசில் அமைச்சராகவும் துணை பிரதமராகவும் பணியாற்றியவர். தற்போதைய பிரதமர் மார்க் கார்னி, உக்ரைன் மறுசீரமைப்புக்கான கனடாவின் சிறப்பு பிரதிநிதியாக அவரை நியமித்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் அமைச்சரவையிலிருந்து விலகிய ஃப்ரீலண்ட், இன்னும் டொரோண்டோவில் உள்ள யூனிவர்சிட்டி–ரோஸ்டேல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் முன்பே அறிவித்துள்ளார்.
இதனிடையே, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டைத் தலைமையிடமாகக் கொண்ட புகழ்பெற்ற கல்வி அறக்கட்டளையான ரோட்ஸ் டிரஸ்டின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) ஃப்ரீலண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் பதவியைத் தொடர்ந்து அவர் ஜூலை 1 முதல் ஆக்ஸ்போர்டுக்கு இடம்பெயர உள்ளார்.


