Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கை எமது உற்ற நண்பன் - ஈரான்

எண்ணெய் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க நாங்கள் தயார்! ஈரான் அதிரடி அறிவிப்பு

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரெசா டெல்கோஷ், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்தினை வெளியிட்ட அவர், இலங்கையை ஒரு நட்பு நாடு என்று விவரித்ததோடு, ஈரான் தனது பங்காளிகளுடன் திறந்த மற்றும் ஆதரவான நிலைப்பாட்டைப் பேணி வருகிறது என்றும் தெரிவித்தார்.

அதற்கு அமைவாக இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் அணுகக்கூடியதாக உள்ளது. அத்தகைய நாடுகளின் தேவைகளை எளிதாக்க ஈரான் தயாராக உள்ளது என்றும் இதன்போது உறுதிப்படுத்தினார்.
அத்துடன், இலங்கைக்குத் தேவைப்பட்டால், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஈரான் தயாராக உள்ளது,  இரு நாடுகளுக்கும் இடையே வலுவான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இலங்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாவதை ஈரான் ஒருபோதும் விரும்பாது என்றும், ஈரான் தேசத்திற்கு இலங்கை மிகவும் மரியாதைக்குரிய நாடு என்றும் அவர் தெரிவித்தார்.  அதேநேரம், நாட்டில் வசிக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு ஆதரவளிக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் ஈரான் விரிவான உள்கட்டமைப்பை நிறுவியுள்ளது.
இன்றுவரை, அவர்களைப் பாதிக்கும் எந்தப் பிரச்சினைகள் குறித்தும் அறிக்கைகள் பதிவு செய்யப்படவில்லை, அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க ஈரான் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தது. இலங்கையின் அந்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.