Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றும் பெண்!

,

சமூக ஊடகங்களில் அறிமுகமான இளைஞர்களை ஏமாற்றி அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டதாக கூறப்படும் பெண் உட்பட நால்வர் மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டர்களில்  31 வயதுடைய பெண்ணொருவரும் காணப்படுகின்றார்.

சந்தேக நபரான பெண் அநுராதபுரம், விஜயபுரம், அசோகபுரம் மற்றும் கெக்கிராவை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களுடன் சமூக ஊடகங்களில் அறிமுகமாகி, அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளார்.

பின்னர் குறித்த இளைஞர்களிடம் நேரில் சந்திக்க வருமாறு கூறி அவர்களை ஏமாற்றி காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று தனது நண்பர்களின் உதவியுடன் இளைஞர்களை தாக்கி, அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் மஹியங்கனை மற்றும் அவுக்கண பொலிஸ் நிலையங்களில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைப்பேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.