Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

பட்டம் பெற்ற பட்டதாரிகள் பட்டமரமாய் வீதியிலே

கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பக்க குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தின் போது,

பட்டம் முடித்து பல வருடங்களாகியும் இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமையினால் தாம் வேலையில்லாமல் காணப்படுவதாகவும், இது குடும்பத்திற்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் வேலையில்லா பட்டதாரிகள் தெரிவித்தனர்.

ஏனைய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் புறக்கணிக்கப்படாமல் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் சுழற்சி முறையிலான போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.