Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வடக்கில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்க முடியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கும் சபைகளில் அவர்கள் ஆட்சியமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தாம் தயார் !

வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அவர்கள் இதனை மறுத்திருந்தனர்.

அதனையடுத்து இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமை (5) கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் பங்கேற்புடன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கூட்டணியாக இணைந்து வட, கிழக்கு மாகாணங்களில் எத்தனை உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கமுடியும் என எதிர்பார்க்கிறீர்கள் என வினவியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அதன்படி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள 17 உள்ளுராட்சி மன்றங்களில் 10 சபைகளில் தம்மால் ஆட்சியமைக்கமுடியும் எனவும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் அநேகமாக 4 சபைகளில் ஆட்சியமைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று தமிழரசுக்கட்சி முன்னிலை வகிக்கும் சபைகளில் அவர்கள் ஆட்சியமைப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆகவே இவ்விடயத்தில் தமிழரசுக்கட்சி சிந்தித்து செயற்படவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.