Breaking News
சம்பளம் அதிகரிப்பு. ; கனடா மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்,
,

கனடா ஒன்ராறியோவில் ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 17.82 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது.
ஒக்டோபர் 1, 2024 நிலவரப்படி, ஒன்ராறியோவின் ஒரு மணி நேரத்திற்க்கான குறைந்தபட்ச ஊழியர் சம்பளம் 17.20 ஆக இருந்தது.
கனடாவில் நிலவும் பணவீக்கம் மற்றும் பொருளாதாரப் போக்குகளுக்கு ஏற்ப ஊழியர் சம்பளத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்ராறியோவில் உள்ள மதுபானசாலை ஊழியர்களின் சம்பளம் வேறுப்பட்டதாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒன்ராறியோவில் உள்ள தொழில் புரியும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச ஒரு மணிநேர ஊதியம் 16.20 கனேடிய டொலர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.