ரஷ்யாவினால் ஆரம்பத்திலேயே விடப்பட்ட தவறு – புடின் வருத்தம் தெரிவிப்பு!
.
ரஷ்யா தனது உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை முறையான ஆயத்தங்களுடன் முன்னதாகவே ஆரம்பித்திருக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான படையெடுப்பை தொடங்குவதற்கு முன்னர் முறையான திட்டமிடலை ரஷ்யா மேற்கொண்டிருக்க வேண்டும் என்று புடின் இதன்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா 2014இல் கிரிமியாவை உக்ரைனிலிருந்து கைப்பற்றிய நேரத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவான படைகள் உக்ரைனில் மோதலை ஆரம்பித்திருந்தன.
இருப்பினும், 8 ஆண்டுகள் கடந்த பின்னரே உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை புடின் தொடங்கியிருந்தார்.இவ்வாறான பின்னணியில், தற்போது போரை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய சமாதான உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும்.