Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டது: ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு

.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்தப்போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கி வரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸேல் தாக்குதல் நடத்தி வருகிறது.இதில் லெபனானில் 3,800-க்கும் அதிகமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 12 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்தனர். இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகளும் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தம் கடந்த 27-ஆம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகவும் இதனால், தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் வேண்டுமென்றே போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.