Breaking News
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சலுகைகள்
.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சலுகைகள் எதுவும் மீளப்பெறப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகைகள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரிடமும் மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச 16 வாகனங்களில் 08 வாகனங்களை மாத்திரமே கையளித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க 11 வாகனங்களை மீள ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.