Breaking News
மட்டக்களப்புப் போராளிகள் என்றுமே மறக்கமாட்டார்கள். அபயனின் போராட்டப் பங்களிப்பு!
.
1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில்இ இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள்இ நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் எதிர் பார்ப்பே இருந்தது, இவனது அன்னைக்கும். எனக்கு கொள்ளி வைக்கிற கடமை இருக்கடா உனக்கு' என்றார். இவன் அமைதியாகச் சிரித்தான். 'ஏன் வேறை ஆரும் கொள்ளி வைச்சா இந்தக் கட்டை எரியாதோ'? பயணமாகிவிட்டான் மட்டக்களப்புக்கு. ஏனெனில் இந்தியப் படையுடன் போர்தொடங்கிவிட்டது. இனி யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க முடியாது. மட்டக்களப்பு இவனை எதிர்பார்க்கிறது. அங்கு இவன் சென்ற நாளிலிருந்து, வீரச்சாவெய்திய நாளிற்கு இடைப்பட்ட இந்தக் காலத்தில், அவனிடமிருந்து வீட்டிற்கு வரும் கடிதங்களெல்லாம் 'நான் சுகம். வீட்டிற்கு வரும் போராளிகளை நன்கு கவனிக்கவும்' என்றே இருக்கும்.
இந்தியப் படையினருடனான போர் நிகழ்ந்த காலத்தில் அபயனின் போராட்டப் பங்களிப்பைஇ மட்டக்களப்புப் போராளிகள் என்றுமே மறக்கமாட்டார்கள். எத்தனையோ முற்றுகைகள் ஆனாலும் இவன் உறுதியாக இருந்தான்.தொடர்ச்சியான முற்றுகைகள் போராளிகளைத் தளர்ச்சிகொள்ளச் செய்யும். அப்போதெல்லாம் இவன் அவர்களை உற்சாகப்படுத்துவான்.
'ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே வரும் காலமெல்லாம்
நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே'
இக் காலகட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயாப் பகுதியில் பயிற்சி முகாம் ஒன்றையும் அமைத்திருந்தான் இவன். அங்கு போராளிகளுக்கு அடிப் படைப் பயிற்சியினை மட்டுமே வழங்க முடிந்தது. துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிக்குப் போதிய ரவைகள் இருக்கவில்லை. பயிற்சியின் அடுத்த கட்டம், ஒரு முகாமைத் தாக்குவது எப்படியென்பது பற்றிய செயல்முறை விளக்கம் -அது அடுத்தநாள் நடைபெறவிருந்தது. ஆனால்இ அன்று அதிகாலையில் இந்திய படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர்.
புதிய போராளிகள் அனுபவ மில்லாதவர்கள் எனினும், தான் கற்பித்த மாதிரியே அவர்களை நடக்கப் பண்ணினான். அங்கு நின்ற தோழன் ஒருவனிடம், அவர்களைக் கூட்டிக்கொண்டு ஆற்றின் வழியாக இறங்கித் தப் புமாறு கூறிவிட்டு, வேந்தன் என்ற போராளியுடன் இணைந்து இந்தியப் படையினரின் முன்னேற்றககைக் கடுத்துக் கொண்டிருந்தான். அபயன் சுட்டுக் கொண்டிருக்கும்போது வேந்தன் பின்வாங்குதல்; பின்புஇ வேந்தன் சுட்டுக்கொண்டிருக்கஅபயன் பின்வாங்குதல் சுமார் 15 நிமிட நேரம் இச்சண்டை நீடித்தது. இதற்கிடையில்இ ஏனையவர்கள் தப்பிவிட்டனர். சண்டையின் இறுதியில்,இறந்த தமது சகாக்களினது சடலங்களை மட்டும் தூக்கியவாறு இந்தியப்படை சென்றது.
அதன்பின் இவனது போராட்ட வாழ்வு தம்பிலுவில் திருக்கோயில் பகுதியில் தொடர்ந்தது. ஒரு மருத்துவனாக ஒரு தாதியாக ஒரு போர் வீரனாக குழுத் தலைவனாக இவனது வாழ்வு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் றொபேட் என்ற போராளிக்கு கையில் கண்ணிவெடி வெடித்து விட்டது. அப்போது. மயக்க ஊசியும் இல்லை; தேவையான மருத்துவ கருவிகளும் இருக்க வில்லை. தொடர்ச்சியான முற்றுகைகளில் பலவற்றை இழந்தாயிற்று. எனவே றொபேட்டிடம், 'தம்பி! நோகுந்தான்; என்ன செய்யிறது? சமாளி' என்று கூறிவிட்டு, கம்பி வெட்டும் கருவியினாலேயே சிதறிய விரல்களை வெட்டியெடுத்தான். அந்தக் காலத்தில் மருத்துவம் தான் எத்தனையோ போராளிகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது.இவனது
இக்காலத்தில்இஅன்ரனி தலைமையில்,வளத்தாப்பிட்டியில் மூன்று 'ஜீப்' புகளில் வந்த இந்தியப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில், இவன் பங்குகொண்டான். இந்தியப் படையரனி, ஏதாவது படை அம்பாறையை விட்டு வெளியேறியதும், திருக்கோயிலில் தேசவிரோதிகளின் முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்றினான். அப்போது அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய அன்ரனி 'எனக்கு நடந்தா, அபயன் சொல்லுற மாதிரி நடவுங்கோ' என்று போராளிகளுக்கு அறிவுறுத்தினான். அத்தாக்குதல் மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இந்தியப் படையினரின் திட்டங்கள் தோல்வியைத் தழுவின.
மேலும் பல தாக்குதல்கள் அதிலும் நரிப்புல் தோட்டம் வழியாக வந்த தேசவிரோதிகளை, மிக குறைந்த எண்ணிக் போராளிகளுடன் கையான
நின்று வெற்றிகொண்ட தாக்குதல் குறிப்பிடத்தக்கது.
சிறீலங்கா அரசுடனான இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் இவன் களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்தான். இந்தக் காவல் நிலையத்தினைக் கைப் பற்றியதும் ஏனைய போராளிகளிடம் கூறினான்; 1984 ஆம் ஆண்டு இந்தப் பொலீஸ் ஸ்ரேசனை அடிக்க வந்துதான் பரம தேவாவையும் ரவியையும் இழந்தம். இண்டைக்கு இதைக் கைப் பற்றிக் காட்டியிருக்கிறம்'.
தொடர்ந்து பல தாக்குதல்கள் பல பொறுப்புக்கள். இப்போதெல்லாம் சிறீலங்காப் படையினர் தேடும் முக்கிய புள்ளிகளில் இவனும் ஒருவனாகி விட்டான். மட்டக்களப்பில் தேடப்படும் 12 பேரில் இவனது பெயரையும் சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது.
அப்போதெல்லாம் அங்குள்ள போராளிகள் இவனது குடும்பத்தைப் பற்றி விசாரிப்பார்கள். 'எனக்கு வீடும் இல்லை; சொந்தமும் இல்லை. எல்லாமே நீங் கள் தான்ரா' என்பான். முகாமில், போராளிகளுக்குத் தேவையான எல்லா உணவு வகைகளையும் தேடிக் கொடுப்பான். தான் மட்டும் மரக்கறி வகைகளையே உண்பான். கேட்டால், 'எனக்கு அதில விருப்பமில்லை' என்பான். ஆனால், அவன் வீரச்சாவெய்தியதும் தான் அவன் ஒரு பார்ப்பன (பிராமணன்) பையன் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களுக்குக் கூட இவன் இதைப் பற்றிக் கூறவில்லை. அன்று விளாவெட்டுவானில் சிறீலங்காப் படையினர் தாக்கிய போது, இவனை நாம் இழந்தோம். ஆயினும்இ அங்குள்ள போராளிகளுக்கு இவன் பாடும் பாடல்கள் நினைவில் உள்ளன. 'வரும் காலமெல்லாம் நம்
நாம் பரம்பரைகள் அடிமையில்லை என்று முழங்கட்டுமே!'
-விடுதலைப் புலிகள் குரல்
நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம்