Breaking News
நன்றி மறப்பது நன்றன்று!
அதிகாரிகளுக்கு லஞ்சம் எல்லாம் கொடுத்து மீதிப் பணத்தில்தான் உணவு போடுவார். அதனால் அவர் போடும் உணவு குழந்தைகளுக்கே போதாது.
1991ல் ஜெயா அம்மையார் ஆட்சிக்காலத்தில் சிறப்புமுகாம் அகதிகளுக்கு வழங்கப்பட்ட பணம் ஒரு நாளைக்கு ஐந்து ரூபா மட்டுமே. இந்த ஐந்து ரூபாவில்தான் மூன்று வேளை உணவும் உட்கொள்ள வேண்டும்.உணவு தயாரிப்பு ஒரு தனிநபரிடம் ஒப்பந்தமாக வழங்கப்படும். அவர் தனது லாபம் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் எல்லாம் கொடுத்து மீதிப் பணத்தில்தான் உணவு போடுவார். அதனால் அவர் போடும் உணவு குழந்தைகளுக்கே போதாது. அவர்கள் பசி தாங்காமல் அழுவார்கள். அதனால் துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாம் போதியளவு உணவு வழங்குமாறு கோரி உண்ணாவிரதம் இருந்தோம்.
எமது கோரிக்கை நியாயமானது என்பதை அதிகாரிகளும் உணர்ந்திருந்தனர். ஆனால் முதல்வர் ஜெயா அம்மையார் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இதனை அறிந்த அகத்தியர் குடில் நிறுவனர் எமக்கு இலவசமாக மதிய உணவை வழங்க முன்வந்தார். துறையூர் சிறப்புமுகாம் மூடப்படும்வரை எம் அனைவருக்கும் நல்ல தரமான ருசிமிக்க மதிய உணவை அவர் வழங்கினார். இதனால் மதிய உணவுக்கான பணத்தில் காலை மற்றும் மாலை உணவையும்கூட நாம் போதியளவு பெற முடிந்தது. நாம் அவரின் முகத்தை ஒருமுறைகூட பார்த்ததில்லை. ஆனால் எமக்கு உணவு வழங்கி பசி ஆற்றிய அவரை ஒருபோதும் மறக்க முடியாது. - தோழர் பாலன் -