Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுத்த, இதுவரையில் வெளியிடப்படாத தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அருட்தந்தை சிறில் காமினி இன்று (20) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளிவராத உண்மைகள்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளிவராத உண்மைகள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பெற்றுக்கொடுத்த, இதுவரையில் வெளியிடப்படாத தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அருட்தந்தை சிறில் காமினி இன்று (20) ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

முன்னாள் பொலிஸ் அதிகாரியொருவர் யூடியூப் சேனலுக்கு வழங்கியதாக கூறப்படும் நேர்காணலை மேற்கோள்காட்டி அவர் இவற்றை கூறியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான வாக்குமூலங்களைப் பெற்றுக கொடுப்பதற்காக, கத்தோலிக்க பத்திரிகையான “ஞானார்த்த பிரதீபய”வின் தலைமை ஆசிரியர் சிறில் காமினி நேற்று (19) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அங்கு  சிறில் காமினி கிட்டத்தட்ட 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்து விட்டு சென்றார்.

அதன் படி, இது தொடர்பான 8 விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று ஊடகவியலாளர் சந்திப்பு அழைப்பு விடுத்திருந்தார். கொழும்பு உயர்மறைமாவட்ட ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி,                                                                                                                                                                "முதலாவது… 2018 நவம்பர் 30 ஆம் திகதியன்று வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் அது தொடர்பான விடயங்கள்.”                                                                                                                       “இரண்டாவது… சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்த IP முகவரியை யார் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி.”                                                                                                                               “மூன்றாவது… வவுணதீவு சம்பவத்தை தவறாக சித்தரித்த சம்பவம்.”                                                                    “நான்காவதாக… தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் கைப்பேசிக்கு வந்த அழைப்பு.”                                    “ஐந்தாவது… தெஹிவளையில் தாக்குதல் நடத்தியவரின் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் யார்?” என்ற கேள்விகளை விசாரணையின் போது வினவியதாக உயர்மறைமாவட்ட ஊடகபேச்சாளர் ஊடகங்களில் முன்வைத்தார்.