பலஸ்தீனர்களுக்கான நியாயத்தை அமெரிக்கா ஒருபோதும் வழங்காது.
அரசியல் ஆயுள் காலம் முழுவதும் அவர் இஸ்ரேலுக்கு கடமைப்பட்டவராகவே இருக்கவேண்டிய நிலை.
அரசியல் தலைவர்களையும், ஜனாதிபதிகளையும் அமெரிக்காவில் உருவாக்குவதில்.
1980களின் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த அலக்ஸாண்டர் ஹெய்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரென எதிர்பார்க்கப்பட்டது. அப்போது இஸ்ரேலிய பிரதமராக இருந்த, மெனாச்சம் பெகின், அமெரிக்க வெள்ளை மாளிகைக்கான பாதை இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் ஊடாகத் தான் செல்கின்றது என்று கூறினார்.
அரசியல் தலைவர்களையும், ஜனாதிபதிகளையும் அமெரிக்காவில் உருவாக்குவதில் யூத சக்திகளின் செல்வாக்கு எந்தளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதற்கு இந்தக் கூற்று உதாரணமாகும்.
இதற்கு பதிலாக அமெரிக்காவில் தெரிவு செய்யப்படும் தலைவர்கள் எல்லோருமே இஸ்ரேல் இழைக்கும் குற்றங்களிலும் யுத்தக் குற்றங்களிலும் தவிர்க்க முடியாத பங்காளிகளாக மாறிவிடுவர்.
இக்கருத்தை நினைவூட்டியுள்ள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகரும் ஒரு காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகளான நிக்ஸன் மற்றும் ரேஹன் நிர்வாகத்தில் செல்வாக்கு மிக்க அதிகாரியுமாகவும் இருந்த பெட் புச்னன் (Pat Buchanan) 1990ஆம் ஆண்டுடு “கெப்பிட்டல் ஹில் என்பது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பிரதேசம்”. என்று கூறியிருந்தார்.
அது அமெரிக்கா யூத செல்வாக்கின் நெருக்குதலுக்கு மிகத் தீவிரமாக உட்பட்டு ஈராக்கை ஆக்கிரமிக்க தயாராகிக் கொண்டிருந்த காலம்.
அப்போது, பெட் புச்னன் “ஈராக் மீதான இந்த யுத்தத்தை இஸ்ரேலியர்கள் மிகவும் வேண்டி நிற்கின்றனர். ஈராக்கிய யுத்த இயந்திரத்தை அமெரிக்கா அழித்துவிட வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு இருக்கின்றது” என்று கூறினார்.
சீனியர் புஷ்ஷ{ம், ஜுனியர் ஜோர்ஜ் புஷ்ஷ{ம் மாறி மாறி ஈராக்கை ஆக்கிரமித்தனர். அமைதியோடும் செழுமையோடும் மக்கள் வாழ்ந்த ஈராக்கை கிட்டத்தட்ட மயான பூமியாக அவர்கள் மாற்றினர். அதேநேரம், ஜுனியர் புஷ் போலியான காரணங்களின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானையும் ஆக்கிரமித்து துவம்சம் செய்தார்.
இதேவழிமுறையை பின்பற்றி அன்றைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலரி கிளின்டனின் நெருக்குதலால் பராக் ஒபாமாவும் எண்ணெய் வளம் மிக்க லிபியாவை ஆக்கிரமித்து அந்த நாட்டின் அன்றை ஜனாதிபதி முஅம்மர் கதாபியை அகற்றினார். பின்னர் ஒபாமா சிரியாவை இன்னொரு புதைகுழியாக மாற்றினார்.
ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, ஈராக் ஆகிய இந்த நான்கு முஸ்லிம் நாடுகளும் இஸ்ரேலின் தேவையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நாசமாக்கப்பட்டு, அந்த நாடுகளின் இலட்சக் கணக்கான மக்களும் கொல்லப்பட்டனர்.
பொதுவாகவே அமெரிக்க ஜனாதிபதிகள் எல்லோருமே இஸ்ரேலுடன் அதன் குற்றங்கள் அனைத்திலும் பங்காளிகளாகவே இருந்துள்ளனர்.
உதாரணத்துக்கு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் களத்தை சந்திப்பதற்கு முன்பே இஸ்ரேலுக்கு விஜயம் செய்வதை வழக்கமாக கொண்டவர்கள்.
அவர்கள் தமது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அந்த விஜயங்களை மேற்கொள்வதுண்டு. அலன் மெக்லொயிட் என்பவர் எழுதி குளோபல் ரிசேர்ச் வெளியிட்டுள்ள கட்டுரையில் இஸ்ரேலிய சக்திகளால் அமெரிக்க ஜனாதிபதிகள் எவ்வாறு பணயக்கைதிகளாக வைக்கப்படுவர் என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய ஆதரவு தரப்பிடமிருந்து ஆகக் கூடுதலான நிதியை பெற்ற ஒருவராவார். சில அறிக்கைகளின்படி 1990ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஆதரவு சக்திகளிடமிருந்து அவர் 4இ346இ264 டொலர்களை பெற்றுள்ளார். இதனால் தனது அரசியல் ஆயுள் காலம் முழுவதும் அவர் இஸ்ரேலுக்கு கடமைப்பட்டவராகவே இருக்கவேண்டிய நிலையுள்ளது.
இஸ்ரேலின் அண்மைக்கால அகண்ட இஸ்ரேலை உருவாக்கும் வகையில் காஸாவில் இருந்து பலஸ்தீன மக்களை வெளியேற்றுவதாகும். சியோனிஸவாதிகளுக்கான ஆயுத விநியோகத்தை மீண்டும் உறுதி செய்துள்ள பைடன் தொடர்ந்தும் அவை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஐ.நா.பாதுகாப்புச் சபையில் யுத்த நிறுத்தம் சம்பந்தமாக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களையும் தனது வீட்டோ அதிகாரத்தை பாவித்து அமெரிக்கா நிராகரித்துள்ளது.
இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரும் குடியரசுக்கட்சி செனட்டருமான லிண்ட்ஸே கிரஹம் இரண்டாவது உலக மகா யுத்தத்தில் அணுவாயுதத்தை பயன்படுத்தி ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பகுதிகளை அழித்தது போல் இஸ்ரேல் காஸா மீது அணு ஆயுதத்தை பிரயோகித்து அதனை அழித்துவிட வேண்டும் என்று யோசனை வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் முன்னாள் தூதுவராக இருந்த நிக்கி ஹேலி அண்மையில் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்ட போது இஸ்ரேல் பீரங்கிப் படை பயன்படுத்தும் ஷெல்லில் “அவர்களை முடித்துவிடுங்கள்” என்று தனது கையெழுத்தில் ஒரு செய்தியை எழுதினார். அமெரிக்க இஸ்லாமிய கல்விமானும் சிவில் உரிமை செயற்பாட்டாளருமான ஒமர் சுலேமான் இதை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மறுபுறத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபை இஸ்ரேல் தலைவர்கள் மீது யுத்தக் குற்றங்களைச் சாட்டி சர்வதேச நீதிமன்றத்தை தண்டிக்கத் துணிந்து விட்டனர். சர்வதேச நீதிமன்றத்தின் பிரதான வழக்குத் தொடுனர் கரீம் காண் மற்றும் அவரது பிள்ளைகளையும் கூட அவர்கள் சாடியுள்ளனர்.
2024 ஜுன் 15இல் நுஸேரத் அகதி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அமெரிக்க படைவீரர்களும் பங்கேற்றுள்ளனர். பணயக்கைதிகள் நால்வரை காப்பாற்ற இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் 274பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 698பேர் காயம் அடைந்துள்ளனர்.
லினா அல் சாபின் என்ற பத்தி எழுத்தாளர், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இனப்படுகொலைகள் வொஷிங்டன், பேர்லின், இலண்டன் ஆகியனவற்றின் பூரண ஆதரவுடன் இடம்பெறுகின்றன.
இப்போது அவர்கள் எல்லோருமே யுத்த நிறுத்தம் பற்றி பேசுகின்றனர். காரணம் போதுமான அளவு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டதாக அவர்கள் நம்புகின்றன” என்று கூறுகின்றார்
எவ்வாறாயினும் தற்போது காஸாவில் நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைகள் யூதர்களின் கொடூரம் பற்றி அமெரிக்க அரசியலில் அவர்களுக்குள்ள இரும்புப்பிடி என்பன பற்றி அமெரிக்காவினதும் உலக நாடுகளினதும் கண்களைத் திறந்துள்ளது. அதனால் தான் பல அமெரிக்க நகரங்களில் கூட அப்பாவி பலஸ்தீனர்களின் படுகொலைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கி உள்ளன.
இஸ்ரேலின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் எதிர்ப்புகள் அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் “காஸா இனப்படுகொலைகளின் ஆதரவாளர்” எனக் கோஷமிடும் அளவுக்கு வலுவடைந்துள்ளன. “இனப் படுகொலையை நிறுத்து” “நீ ஒரு கொலைகாரி, யுத்தக் குற்றவாளி” என்று ஒரு நிகழ்ச்சியின் போது அவரை நோக்கி மக்கள் பெரும் கோஷம் எழுப்பியுள்ளனர்.
ஜனாதிபதி ஜோ பைடனால் அமெரிக்காவின் உள்ளக திணைக்களத்துக்கு நியமிக்கப்பட்ட அதிகாரியான லிலி கிறின்பெர்க் கொல் என்பவர் ஜனாதிபதி காஸா பகுதியில் இடம்பெறும் இனப் படுகொலைக்கு பங்களிப்பு செய்கிறார் எனக் கூறி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
காஸாவில் இடம்பெறும்; கொடுமைகளை நியாயப்படுத்தும் வகையில் யூதர்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஜனாதிபதி கூறியுள்ளதாக லிலி கிறின்பெர்க் கொல் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க செனட்டர் எலிஸபெத் வொரன் “அமெரிக்கா மனிதாபிமான உதவிகளை வழங்குவதை உண்மையிலேயே ஒரு பாரதூரமான விடயமாக எடுத்துக் கொண்டால், அதை எந்தப் பிரச்சினைகளும் இன்றி செய்திருக்கலாம்.
வான் பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா உத்தரவிட்டிருக்கலாம்.
அதன்பின் அமெரிக்க விமானங்கள் நிவாரண உதவிகளை போட்டிருக்கலாம். அல்லது முன்னரங்க நிலைகளை திறந்து விடுமாறு எகிப்தை கேட்டிருக்கலாம். அப்போது அமெரிக்கப் பாதுகாப்போடு உணவுகள் மற்றும் மருந்துப் பொருள்களை தரைவழியாக் கொண்டு சென்றிருக்கலாம்” என்று கூறியுள்ளார்.
பிலபலமான பிரித்தானிய பத்திரிகையாளர் டேவிட் ஹேர்ஸ்ட் “பைடன் முன்வைத்துள்ள யுத்த நிறுத்தத்தில் ஹமாஸ் ஈடுபாடு கொண்டுள்ளது.
ஆனால் வொஷிங்டன் தொடர்ந்தும் தனது நிலைப்பாடுகளில் உறுதியற்ற டெல்அவிவ்விற்கு பின்னாலேயே ஆதரவாக இருந்து வருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நிலைமைகளின் பின்னணியில் துரதிஷ்டவசமான பலஸ்தீன மக்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து எதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும்?