தமிழரசு கட்சியினருக்கு எதிராக திரும்புகின்றனரா தமிழ் மக்கள்?: முல்லைத்தீவில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்
.
முல்லைத்தீவில் பல பகுதிகளில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவரொட்டிகளை ஒட்டியது யார் என குறிப்பிடப்படாத போதிலும், தமிழ் மக்களுக்கு பொய்களை கூறி மக்களை ஏமாற்றும் தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்போம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி தலைவர்கள் வடக்கில் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து பல்வேறு அரசாங்கங்களிடமிருந்து பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாக இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இவற்றில் சில சுவரொட்டிகளை பொலிஸார் கிழித்து எறிந்துள்ள போதிலும் முல்லைத்தீவின் பல கிராமங்களில் இன்றும் அவை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்க, தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்துள்ளதாக சட்டத்தரணி சுமந்திரன் அறிவித்த பின்னரான சூழலிலேயே, இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.