இலங்கையில் 80 வீதமான மரணங்களுக்கு தொற்றா நோய்களே காரணம்
.
தொற்றாத நோய்கள் இலங்கையில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன் இலங்கையில் 80 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமுது பண்டார இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலைமையை எதிர்கொள்ள மாத்தளை மாவட்டத்தில் பலதரப்பு தலையீட்டை உருவாக்குவதற்கு மத்திய மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவதற்கு மாத்தளை மாவட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாத்தளை மாவட்ட செயலாளர், மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், பிராந்திய கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட விவசாய பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட சமூக சேவைகள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர், அனர்த்த உதவி பணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பலதரப்பட்ட நிறுவனங்களும் இந்தக் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் குழு ஒன்று கூடி தொற்றாத நோய்களைத் தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு தேவையான வசதிகள் மாத்தளை மாவட்டச் செயலாளர் ஊடாக மத்திய மாகாண சபையின் தலையீட்டின் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.