மலையக ரயில் பாதையில் இன்று முதல் மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
.
மலையக ரயில் பாதையில் பதுளை - அம்பேவெல இடையேயும், கிழக்கு ரயில் பாதையில் கொழும்பு - கோட்டை - திருகோணமலை இடையேயும் ரயில் சேவைகள் (20) இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மலையக ரயில் பாதையில் பதுளை - அம்பேவெல இடையேயான ரயில் சேவைகள் (20) இன்று முதல் பின்வருமாறு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பதுளை ரயில் நிலையத்திலிருந்து காலை 09.00 மணி மற்றும் பிற்பகல் 03.00 மணிக்கு அம்பேவெலவுக்கு இரண்டு ரயில்கள் செயல்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது (காலை 09.00 மணிக்கு இயக்கப்படும் ரயில் புதன்கிழமைகளில் மட்டும் செயற்படமாட்டாது),
அம்பேவெல ரயில் நிலையத்திலிருந்து காலை 09.30 மணி மற்றும் பிற்பகல் 03.00 மணிக்கு பதுளைக்கு இரண்டு ரயில்கள் செயற்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது (பிற்பகல் 03.00 மணிக்கு செயற்படும் ரயில் புதன்கிழமைகளில் மட்டும் இயக்கப்படாது)


