Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சர்வதேச மகிழ்ச்சி தினம் மார்ச் 20.

147 நாடுகளை உள்ளடக்கி நடாத்தப்பட்ட ஆய்வின்படி 4.0 புள்ளிகளைப் பெற்று இலங்கை உலகளாவிய ரீதியில் 134 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினம்  மார்ச் 20.

மகிழ்ச்சி என்பது ஓர் உணர்ச்சி, அதனை யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாது. நமது ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை நோக்கித்தான் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20ஆம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 20 ஆம் திகதியில் உலக மகிழ்ச்சி தினத்தை சிறப்பிப்பதற்கான காரணம், இளவேனிற் காலத்தின் அதாவது, வசந்த காலத்தின் தொடக்க நாள். அந்த நாளில் பகலும் இரவும் சரிசமமாக இருக்கும். இதனால்தான் இந்த நாளை, உலகின் மகிழ்ச்சி தினமாகச் சிறப்பிக்க தேர்ந்தெடுத்திருக்கிறது ஐ.நா. நிறுவனம்.

மகிழ்ச்சியாக வாழ்வது, மனித உரிமைகளில் ஒன்று. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம், உலக மகிழ்ச்சி நாளை உருவாக்கியது. அந்த அவையின் அறிவிப்பின்படி, ஒவ்வோர் ஆண்டும், மார்ச் 20ஆம் தேதி, ஒவ்வொரு தலைப்பில்,   உலக மகிழ்ச்சி நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக "சமூக ஊடகம் மற்றும் மகிழ்ச்சி" விளங்குகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் 19/03/2026 வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் மொத்தம் 147 நாடுகளை உள்ளடக்கி நடாத்தப்பட்ட  ஆய்வின்படி 4.0 புள்ளிகளைப் பெற்று இலங்கை உலகளாவிய ரீதியில் 134 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம், உலக மகிழ்ச்சி நாளை உருவாக்கியது மிகவும்  நல்ல விடயம் தான்,  ஆனால் சில நாடுகளின் நலனுக்காக பல நாடுகளின் மகிழ்ச்சி பறிபோவதை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை கண்டுகொள்வதில்லை. இதில் ஈழத்தமிழர்களின்  மிகழ்ச்சி தெடங்கி லெபனான், காசா, உக்ரைன், வெனிசுலா, கண்முன்னே ஈரான் மக்களின்  மகிழ்ச்சியும் அடங்கும்.