அடுத்தடுத்து வீட்டு காவலில் வைக்கப்படும் ராணுவ அதிகாரிகள்! பின்னணியில் பகீர்!வங்கதேசத்தில் பதற்றம்...
பல அதிகாரிகள் இடைக்கால அரசின் நடவடிக்கைக்கு பயந்து குடும்பத்துடன் தங்களின் வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

வங்கதேசத்தில் இடைக்கால அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இப்படியான சூழலில் வங்கதேசத்தில் அடுத்தடுத்து 5 ராணுவ அதிகாரிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. அமைதியாக இருந்த இந்த நாட்டில் கடந்த ஆண்டு பெரும் வன்முறை வெடித்தது. அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது.
அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. அமைதியாக இருந்த இந்த நாட்டில் கடந்த ஆண்டு பெரும் வன்முறை வெடித்தது. அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது.
இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இப்போது அங்கு இடைக்கால அரசு நடந்து வருகிறது. இதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இருப்பினும் வங்கதேசத்தில் பதற்றம் மட்டும் குறையவே இல்லை. வங்கதேசத்தில் தொடர்ந்து ராணுவம் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இப்போது அங்கு இடைக்கால அரசு நடந்து வருகிறது. இதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இருப்பினும் வங்கதேசத்தில் பதற்றம் மட்டும் குறையவே இல்லை. வங்கதேசத்தில் தொடர்ந்து ராணுவம் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே தான் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கும், ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. வாக்கர் உஸ் ஜமான், ஷேக் ஹசீனாவின் உறவினர் என்பதோடு, அவர் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறார். ஆனால் இடைக்கால அரசு அப்படியில்லை. இந்தியாவுடன் மோதி கொண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி வாக்கர் உஸ் ஜமானை பதவியில் இருந்து நீக்கவும் இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியது. இதனை நம் நாட்டின் உளவுத்துறை முறியடித்தது.
இப்படியான சூழலில் தான் 5 நாள் பயணமாக வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இதற்கிடையே வங்கதேசத்தில் அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி 2 பிரிகேடியர், ஒரு கர்னல், ஒரு லெப்டினன்ட் கர்னல், ஒரு மேஜர் என 5 பேர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர்கள் அனைவரும் தங்களின் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு 24 மணிநேர கண்காணிப்பில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரை வங்கதேச இடைக்கால அரசு வெளியிடவில்லை.
இருப்பினும் அந்த அதிகாரிகள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வங்கதேச பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அதன்படி இன்ஜினியர் பிரிகேடில் பொறுப்பு வகித்து வரும் பிரிகேடியர் ஜெனரல் எஸ்எம் ஜகாரியா உசேன், இன்பேன்ட்ரி பிரிகேட்டில் பணியாற்றி வரும் பிரிகேடியர் ஜெனரல் இம்ரான் ஹமீத் (இவர் ஷேக் ஹசீனாவுக்கு நெருக்கமானவர். இவர் ஷேக் ஹசீனாவின் ஏடிசியாக பணியாற்றிஇருந்தார்), ராபிட் ஆக்ஷன் பட்டாலியனின் கர்னல் அதகிாரி அப்துல்லா அல் மோமன், லெப் வங்கதேச எல்லை காவல் படை பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் முகமது ரத்வானுல் இஸ்லாம், கிழக்கு பெங்கால் ரெஜிமென்ட் மேஜர் அதிகாரி முகமது நோமன் அல் ஃபரூக் ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினர். அதாவது மாணவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள், மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் இறந்தனர். இந்த விவகாரத்தில் இந்த அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு இருந்தது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் மீது வங்கதேசத்தில் நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டு வருகிறது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் நிர்வாகிகள், தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாய்ந்து வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தற்போதைய நடவடிக்கை என்பது வங்கதேசத்தின் குற்ற தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக பல அதிகாரிகள் இடைக்கால அரசின் நடவடிக்கைக்கு பயந்து குடும்பத்துடன் தங்களின் வீட்டை விட்டு வெளியே ஓடினர். இப்படியான சூழலில் தான் தற்போது 5 ராணுவ அதிகாரிகளும் 24 மணிநேர கண்காணிப்பு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த நடவடிக்கைக்கு வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளிக்கிறாரா? எதிர்ப்பு தெரிவிக்கிறாரா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. தற்போது அவர் ரஷ்யாவில் உள்ள நிலையில் அவர் வந்த மீண்டும் வங்கதேசம் வந்த பிறகு தான் அவரது நிலைப்பாடு என்ன? என்பது தெரியவரும்.