Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளுடன் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளுடன் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள், இந்திய தூதரக அதிகாரிகளை இன்றையதினம்(10) நுவரெலியா நகரில் உள்ள கிரேன்ட் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்கள்.

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்தியாஞ்சல் பாண்டே மற்றும் இந்திய இணை உயர்ஸ்தானிகர் (கண்டி) வீ.எஸ். சரண்யா ஆகியோரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில், இருநாட்டு நட்புறவு, தொழிலாளர் நலன், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் போது இ.தொ.கா சார்பில் நிதிசெயலாளரும், தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாநகர சபை பிரதி மேயர் சிவன்ஜோதி யோகராஜ், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத், அமைப்பாளர் சின்னையா பாலகிருஸ்னன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மேலும் இந்திய உயர் ஸ்தானியரிடம் மலையக மக்களின் எதிர்கால வேலை திட்டம் மற்றும் வேலை வாய்ப்பு 10000 வீடுகள் கட்டுமானம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.