Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுகின்ற கல்விமாணி பட்டதாரிகள் ஆசிரியர் சேவைக்கு சிக்கல்!

,

தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுகின்ற கல்விமாணி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளும்போது,

அவர்கள் பெற்ற பட்டத்தின் தரம் பற்றி சிக்கலான சூழ்நிலை தோன்றியுள்ளதாக இதுவரையில் தெரியவந்துள்ளதாகவும், இதுகுறித்து கல்வி அமைச்சின் மட்டத்தில் மீளாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2025.06.14 ஆம் திகதி ஆசிரியர் - அதிபரி சங்க கூட்டணியின் பிரதிநிதிகளுடன் இசுருபாய, கல்வி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 சமீபத்தில் வழங்கப்பட்ட கல்விமாணி பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அங்கீகரிக்கப்பட்ட நியமனங்கள் என்றும், அந்த நியமனங்கள்  ஆசிரியர் சேவை பிரமான குறிப்பிற்கு அமைவாக வழங்கப்பட்டுள்ளதென்றும், தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கூட்டிணைக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களின் கல்விமாணி பட்டத்தின் தரத்தை மீண்டும் மீளாய்வு செய்வதற்கு கல்வி அமைச்சின் மட்டத்தில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மீளாய்வு செயற்பாடுகளுக்கு இணங்க, எதிர்காலத்தில் இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள கல்விமாணி பட்டதாரிகளின் தரம் பற்றி கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் ஆசிரியர் - அதிபர் பிரதிநிதிகளின் சந்திப்பின்போது அமைச்சர் தெரிவித்தார்.