Breaking News
'இந்தியாவிற்கு 26% வரி': 'பரஸ்பர வரிகள்' தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று "விடுதலை நாள்" (Liberation Day)என்று அறிவித்துள்ளார்.
இது சார்ந்த அறிவிப்புகள் தற்போது வெள்ளை மாளிகையில்அவர் வெளியிட்டார். அதன்படி பரஸ்பரவிதிகள் பாதியளவு குறைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
நாடுவரியாக எவ்வளவு வரிகள் என்பதையும் அவர் கூறினார்.
டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அதே போல, ஆட்டோமொபைல் மீதான 25% வரிகள் ஏப்ரல் 3 முதல் அமலுக்கு வரும் என கூறினார்.
டிரம்பின் அறிவிப்பு வெளியாகும் முன்னர் பங்குச் சந்தையிலும், வணிக உலகிலும் பெரும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது.
புதன்கிழமை யூரோ மற்றும் ஸ்டெர்லிங் போன்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் சரிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.