தசை பிடிப்பு பிரச்சனைக்கு இது தான் காரணமா? சரி செய்வது எப்படி?
தினமும் அரை மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதைச் செய்வதால் தசைப்பிடிப்பு பெருமளவு குறையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

உடலில் பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அடிக்கடி கால் பிடிப்புகள் ஏற்படும். எனவே, உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சு போன்ற பொட்டாசியம் நிறைந்த பழங்களை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
நாம் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருந்தாலும் அல்லது படுத்திருந்தாலும், நம் கால்கள் மற்றும் கைகளில் பிடிப்புகள் ஏற்படும். இந்த மாதிரியான சூழலில், நாம் எழுந்து சிறிது நேரம் நடந்தவுடன் இந்த பிடிப்புகளின் வலி பொதுவாகக் குறையும். சிலர் உட்கார்ந்திருந்தாலும் சரி, படுத்திருந்தாலும் சரி, கால்களில் பிடிப்புகள் மற்றும் கூச்ச உணர்வுகளை அனுபவிப்பார்கள். அதோடு, பொருட்களை உறுதியாகப் பிடிக்கும் திறனும், தொடு உணர்வும் குறைகிறது. இது ஏன் நடக்கிறது? தசை பிடிப்புகள் ஏற்படக் உண்மையான காரணம் என்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் எதையாவது மிதிக்க விரும்பினாலும் சரி, பிடிக்க விரும்பினாலும் சரி, அந்தப் பொருள் சூடாக இருக்கிறதா? குளிர்ச்சியாக இருக்கிறதா? என்பதை புரிந்து கொள்ள, இந்த புற நரம்புகள் சரியாகச் செயல்பட வேண்டும். இந்த அமைப்பில் ஏற்படும் எந்தவொரு சிறிய பிரச்சனையும் உணர்வு இழப்பு, உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். புற நரம்புகளுக்கு ஏற்படும் சேதத்தால் ஏற்படும் இந்த அறிகுறிகள் புற நரம்பியல் (Peripheral neuropathy) என்று அழைக்கப்படுகின்றன. இந்த நரம்பியல் பிரச்சனை பெரும்பாலும் நீரிழிவு நோயாளிகளிடம் காணப்படுகிறது.
- கால்களும் கைகளும் மரத்துப் போவதற்குப் பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். நம் உடலில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் குறைபாடு காரணமாக பிடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
- மேலும், அதிகமாக வேலை அல்லது உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் சோர்வு, கால்களில் பிடிப்புகளை ஏற்படுத்தும்.
- தசை பிடிப்புகள் சில வகையான மருந்துகளின் பக்க விளைவுகளாகவும் இருக்கலாம்.
- குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கால் பிடிப்புகள் ஏற்படுவது இயல்பானது.
- நீரிழிவு நோய், தைராய்டு, சிறுநீரக நோய் மற்றும் நரம்பு பிரச்சனைகள் காரணமாக தூக்கத்தின் போது கால் பிடிப்புகள் ஏற்படலாம்.
- தினமும் அரை மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதைச் செய்வதால் தசைப்பிடிப்பு பெருமளவு குறையும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 2015 ஆம் ஆண்டு 'ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் அண்ட் டயக்னாஸ்டிக் ரிசர்ச்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வழக்கமான உடற்பயிற்சி கால் பிடிப்புகளைக் குறைக்கும்.
தூங்கும் போது கால் பிடிப்பைத் தடுக்க என்ன செய்வது?:
- இரவில் கால் பிடிப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
- புகைப்பிடிப்பது, மது, போதைப்பொருள் பயன்பாடு காரணமாக கால் பிடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- கால்கள் மிகவும் விறைப்பாக இருந்தால், படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒரு துணியை வெந்நீரில் நனைத்து, அதைப் பிழிந்து, தசைப்பிடிப்பு உணரும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும். இதை தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- கூடுதலாக, படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் கால்களை மசாஜ் செய்வது பிரச்சனையைக் குறைக்கும்.
- நம் உடலில் பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அடிக்கடி கால் பிடிப்புகள் ஏற்படும். எனவே, உருளைக்கிழங்கு, வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சு போன்ற பொட்டாசியம் நிறைந்த பழங்களை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
- இரவில் உங்கள் தூக்க நிலை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- காலையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதோ அல்லது நிற்பதோ கால் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 5 நிமிடங்கள் நடக்க அறிவுறுத்தப்படுகிறது.