Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

5 தசாப்தங்களின் பின் அபிவிருத்தி காணும் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை வீதி - ஆரம்பித்து வைத்தார் ரஜீவன் MP!

,

5 தசாப்தங்களின் பின் அபிவிருத்தி காணும் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை வீதி - ஆரம்பித்து வைத்தார் ரஜீவன் MP!

ஜனாதிபதி "அனுர" தலைமையிலான அரசின் 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக இன்று யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தின் அல்லைபிப்ட்டி, அலுமினியம் தொழிற்சாலை வீதியை, காப்பெற் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் நேற்று (03) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மக்களின் அவசிய தேவை கருதி தேசிய மக்கள் சக்தியின் வேலணை பிரதேச சபை உறுப்பினரான ஆனந்தராசா சதீஸ்குமாரின் திட்ட முன்மொழிவுடன், தெரிவு செய்யப்பட்ட குறித்த வீதியின் அபிவிருத்திக்கான ஆரம்ப பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன்  ஆரம்பித்து வைத்தார்.

குறித்த 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் முதற் கட்டமாக வடக்கில் 25 வீதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், வேலணை பிரதேசத்தில் 
30.7 மில்லியன் நிதிச் செலவில்
1.3 கிலோ மீற்றர் தூரம் கொண்ட குறித்த வீதியானது "காப்பெற்" மற்றும் கொங்கிறீற் ஆகிய இரு வகைகளிலும் குறித்த பகுதியின் நீரோட்டத்துக்கு இசைவாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

இன்னிலையில் அலுமினியம் தொழிற்சாலை வீதி, 
50 வருடங்களின் பின், குறிப்பாக வீதி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து நிரந்தர அபிவுருத்தியை காணாதிருந்த குறித்த வீதி இன்று அதன் எதிர்பார்ப்பை எட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதனிடையே குறித்த பகுதியில் இருக்கும் மற்றொரு அவசிய வீதியான மண்டைதீவு இணைப்பு வீதியையும் அபிவிருத்தி செய்து தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்களின் கோரிக்கையின் நியாயம் கருதி குறித்த வீதிக்கான அபிவிருத்தி விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்கு முன்னர் அவ்வீதியின் பாலம் ஒன்று சுமார் 60 மில்லியன் நிதியில் கட்டமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், குறித்த பாலம் நிறைவுற்றபின் குறித்த வீதிக்கான நிதி பெற்றுத்தரப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி அனுர கிராம மக்களின் நலன்களில் அதிக அக்கறை செலுத்தி வருவதால் உங்கள் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் என்றும் சுட்டிக்காட்டினார்.