Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

சிறிலங்காவின் சட்டம் இனவழிப்பாளர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் சாதகமாகவே உள்ளது!

இடியப்ப சிக்கலாக இருக்கும் இலங்கையின் சட்டத்துறை மீது தமிழ்மக்களுக்கு நம்பிக்கை இல்லவே இல்லை.

சிறிலங்காவின் சட்டப்படி குற்றவாளியாக நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் பிறிதொரு வழக்கில் சாட்சியாக மாற அல்லது சாட்சி சொல்ல முடியாது.
இப்போது சோமாரத்தன ஏனைய இராணுவ அதிகாரிகள் யாழ்ப்பாணத்தில் செய்யத படுகொலைகள் தொடர்பில் சிறிலங்காவின் எந்த ஒரு  நீதிமன்றில் தோன்றியும் சாட்சி சொல்ல சட்டப்படி முடியாது.
உயர்  நீதிமன்றம்  எந்த ஒரு குற்றச்சாட்டில் இருந்தும் நிரபராதி என விடுவிக்கப்பட்ட எவரையும் மீண்டும் அதே குற்றச்சாட்டில் அதே உயர் நீதிமன்றில் குற்றவாளி என நிரூபிக்க முடியாது. 
கிருஷாந்தி உட்பட பலரின் கொலைக்குற்றச்சாட்டில் மரணதண்டனை வழங்கி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லான்ஸ் கோப்பரல் சோமாரத்தன ராஜபக்சா சிறிலங்காவின் அரசியல் அமைப்பு சட்டப்படி இனி எந்த ஒரு வழக்கிலும் சாட்சி சொல்ல முடியாது , முடியாது , முடியாது.
இப்போது முக்கியமான விடயத்திற்கு வருவோம். 

மகிந்த, கோட்டபாய, ரணில் போன்றவர்கள் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றவாளிகள் என   தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் அவர்கள் தமது கட்டளையின் கீழ் செயற்பட்ட இராணுவம் அல்லது துணை இராணுவ குழு முக்கியஸ்தர்கள் செய்யத கொலைகள் தொடர்பில்  அவர்களிற்கு எதிராக சாட்சியம் அளிக்க முடியாது.

உதாரணம்
 01  :- மகிந்த ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் வெள்ளை கொடியுடன் சரணடைந்தவர்களை கொலை செய்யத இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக மகிந்த ஊழல் வழக்கில் குற்றவாளியாக தண்டனை வழங்கப்பட்டால்  சாட்சியம்  அளிக்க முடியாது. 
02 :- உழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டால் கோட்டபாய வெள்ளைவான் கடத்தலுக்கு பொறுப்பாக செயற்பட்ட அதிகாரிகள் தொடர்பில் சாட்சி அளிக்க முடியாது.
03 :- வெளிநாட்டு சுற்றுலா வழக்கில் தண்டனை வழங்கப்பட்டால் ரணில் விக்கிரமசிங்காவால் பட்டலந்தை படுகொலைகளை செய்யத அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியம் அளிக்க முடியாது.

இப்படி இடியப்ப சிக்கலாக இருக்கும் இலங்கையின் சட்டத்துறை மீது நம்பிக்கை ஏதும் தமிழ்மக்களுக்கு கடந்த கால போர் குற்றங்கள் , இனவழிப்புக்கள் , வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டது தொடர்பில் இல்லவே இல்லை. ஆதலால் தான் நாம் சர்வதேச விசாரணை  தீர்ப்பாயம் ஒன்றை கோருகின்றோம். 
தோழரிகள் வண்டிலுக்கு முன்னால் குதிரையை  பூட்டுவதற்கு பதிலாக குதிரைக்கு முன்னால் வண்டிலை பூட்டுகின்றனர்.  அவர்களால் தங்கள் தலைவர் மரியாதைக்குரிய ஹேகன விஜயவீரவுக்கும் காணாமல் போன ஜனாதிபதி அனுரா அவர்களின் கூடப்பிறந்த சகோதரருக்கு கூடவும் இலங்கைத்தீவில் நீதியை பெற முடியாது போகலாம் .