Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை!

விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய சிங்கள நபர்,

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய சிங்கள நபர். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்று கொழும்பில் செய்யப்பட்டுள்ளது. 
இந்நினைவேந்தல் கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், (அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிராக) மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதமாக நிகழவுள்ள இந்த நினைவேந்தலில் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர். எனினும் சில இனவாத போக்குடையோர் மற்றும் சிங்கள ராவய அமைப்பினரும், குறித்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக செயற்பட்டு வருகின்றனர்.

இதன்போது குறித்த தரப்பினர் பாதுகாப்பு தரப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதோடு இனவாத கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன், இந்நிகழ்வின் போது எதிர்ப்பினை வெளியிட்டு வரும் ஒரு நபர், கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு வருவதுடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.