Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி..! - தமிழரசுக்கட்சி இணக்கம்..!

4 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா - செட்டிக்குளம் பிரதேசசபையில் ஆட்சியமைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு தமிழரசுக்கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது. 

18 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி - 2,838 வாக்குகள் - 4 உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி - 2,085 வாக்குகள் - 3 உறுப்பினர்கள் (போனஸ்-1), இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 1,957 வாக்குகள் - 3 உறுப்பினர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 1,661 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-1), சிறிலங்கா தொழிலாளர் கட்சி - 1,573 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-2), ஜனநாயக தேசிய கூட்டணி - 1,225 வாக்குகள் - 2 உறுப்பினர்கள் (போனஸ்-1), சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 626 வாக்குகள் - 1 உறுப்பினர் (போனஸ்-1), சுயாதீன குழு 2 - 340 வாக்குகள் 1 உறுப்பினர் (போனஸ்-1) எனப் பகிரப்பட்டுள்ளன.

இதில் 4 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள்  ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன. 

இதன்மூலம் 11 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மை பலத்துடன் தென்னிலங்கையின் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கவுள்ளது. அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக தவிசாளர், பிரதி தவிசாளர் ஆகியோர் முஸ்லிம் பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த இரு போனஸ் ஆசனமும், இரட்டைத் தொகுதியைக் கொண்ட ஒரே வட்டாரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த இரு முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து அக் கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.