Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இறந்த மீன்களை உண்பதை தவிருங்கள்.!! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

.

நாட்டில் இடம்பெற்ற வெள்ளத்திற்குப் பின்னர் காணப்படும் இறந்த மீன்களை உண்பதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் ஏற்பட்ட  வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, இறந்த விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பாக கையாள வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இலங்கை அலுவலகம் முக்கிய பொதுச் சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

அதில், வெள்ளம், நோய் அல்லது காயம் காரணமாக இறந்த விலங்குகளின் உடல்களை சரியாக கையாளாமல் விட்டால், அவை மனிதர்களுக்கு தீவிர சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதனால், வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் இறந்த மீன்கள் உட்பட எந்தவொரு விலங்கின் உடலையும் பொதுமக்கள் தொடுவது, எடுத்து சேகரிப்பது அல்லது உண்பது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

இறந்த விலங்குகள் தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், முதலில் பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது உள்ளூர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்வோருக்கு கையுறை, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம்.
மேலும் சவர்க்காரம் மற்றும் சுத்தமான நீரால் கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற கடுமையான சுகாதார பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் இலங்கை கிளை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.