கண்டெடுத்த தங்க மோதிரத்தை சுன்னாகம் பொலிஸ் ஒப்படைத்த இளைஞன் நெகிழ்ச்சி அடையச் செய்த பொறுப்பதிகாரி!
,
கண்டெடுத்த தங்க மோதிரத்தை சுன்னாகம் பொலிஸ் ஒப்படைத்த இளைஞன் நெகிழ்ச்சி அடையச் செய்த பொறுப்பதிகாரி!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொமர்சல் வங்கி பகுதியில் 3/4 தங்க மோதிரம் ஒன்று கீழே விழுந்து தவறவிடப்பட்டுள்ளது. அதனை குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய செல்வராசா பார்த்திபன் என்னும் இளைஞன் வங்கிக்கு சென்று வெளியில் வரும் வேளையில் கண்டெடுக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி சிவானந்தம் நிதர்சன் இடம் ஒப்படைக்கப்பட்டது.
உடனடியாக உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தி வங்கி முகாமையாளருடன் தொடர்பு கொண்டு தவறவிடப்பட்டவர்களுடைய தகவலைப் பெற்று அவரை உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். தவறவிடப்பட்டவர் 65 வயதுடைய இராஜரட்னம் சனிக்கா மெடிக்கல் உரிமையாளர். அவரை அழைத்து வங்கி முகாமையாளர் பொலிஸ் பொறுப்பதிகாரி இவர்கள் முன்னிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞனால் தவறவிடப்பட்டவரிடம் தங்க மோதிரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்பதிகாரியாக இருப்பதும் மக்களுக்கான சேவைகளை திறன்பட செய்யும் அதிகாரிகள் இருப்பதற்கு இவரே உதாரணம்.


