Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணத்துக்கு நீதி வேண்டி கொழும்பில் முறைப்பாடு!

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உள்ள சட்டப் பிரிவு துணை ஆய்வாளர் அலுவலகத்தில் தனுக ரணஞ்சக கஹந்தகமகே எனும் தென்னிலங்கை சட்டத்தரணியால் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிவிப்பை சட்டத்தரணி தனது பேஸ்புக் தளத்தில் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

குறித்த விவகாரம் அதிகாரப்பூர்வ சட்ட வழிகள் மூலம் முறையாக விசாரிக்கப்படுவதையும், புறக்கணிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதே எனது முன்னுரிமை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விவகாரம் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாகவும் முழுமையாகவும் தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர், இந்த வழக்கு முன்னேறும்போது தொடர்ச்சியான ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் சரணடைந்த இசைப்பிரியா பாலச்சந்திரன் உட்பட பலர் கொல்லப்பட்டமை குறித்த போர் குற்றச்சாட்டு விசாரணைகளை கோரி குறித்த சட்டத்தரணி, பொலிஸ் மா அதிபருக்கு மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.