2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியில்! - “மிலானோ–கோர்டினா 2026”
“மிலானோ–கோர்டினா 2026” (Milano–Cortina 2026) என அழைக்கப்படும் இந்த ஒலிம்பிக், பெப்ரவரி இன்று 6 முதல் 22 வரை நடைபெறவுள்ளது.
உலகின் மிகப்பெரிய குளிர்கால விளையாட்டு விழாவான 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலியில் நடைபெற உள்ளன.
“மிலானோ–கோர்டினா 2026” (Milano–Cortina 2026) என அழைக்கப்படும் இந்த ஒலிம்பிக், பெப்ரவரி இன்று 6 முதல் 22 வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிகள் மிலான், கோர்டினா டி’அம்பெஸ்ஸோ உள்ளிட்ட பல நகரங்களில் நடத்தப்படுகின்றன. பனிச்சறுக்கு, ஸ்னோபோர்டிங், ஐஸ் ஹாக்கி, ஃபிகர் ஸ்கேட்டிங் உள்ளிட்ட பல்வேறு குளிர்கால விளையாட்டுகளில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஏற்கனவே உள்ள விளையாட்டு அரங்குகளை அதிகளவில் பயன்படுத்தும் வகையில் இந்த ஒலிம்பிக் ஏற்பாடு செய்யப்படுகிறது. உலக நாடுகளின் ஒற்றுமை, விளையாட்டு ஆவி மற்றும் திறமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய சர்வதேச விளையாட்டு நிகழ்வாக 2026 குளிர்கால ஒலிம்பிக் கருதப்படுகிறது.


