உலகின் அசிங்கமான விலங்கு நியூஸிலந்தின் "இந்த ஆண்டுக்கான மீன்" பட்டத்தை வென்றது!
600 முதல் 1,200 மீட்டர் ஆழத்தில் அவை உயிர் வாழும்.

தோற்றத்தைப் பார்த்து எடை போட வேண்டாம்..
உலகின் ஆக அசிங்கமான விலங்காக வகைசெய்யப்பட்ட blobfish எனும் மீன் இப்போது நியூஸிந்தின் "இந்த ஆண்டுக்கான மீன்" என பெயர் பெற்றுள்ளது.
நியூஸிசிலந்தின் சுற்றுப்புறக் குழுமம் ஒன்று அதை அறிவித்தது.
ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் அந்தப் போட்டியில் நியூஸிலந்தின் நன்னீர், கடல் வாழ் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது நோக்கம்.
இம்முறை 5,500க்கும் அதிகமான வாக்குகள் செலுத்தப்பட்டதாய் BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
அதில் ஏறக்குறைய 1,300 வாக்குகளை Blobfish தட்டிச்சென்றது.
அது சுமார் 30 சென்ட்டிமீட்டர் நீளம் வரை வளரும்.
ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா (Tasmania) ஆகியவற்றின் கரையோரங்களில் Blobfish பெரும்பாலும் வாழும்.
600 முதல் 1,200 மீட்டர் ஆழத்தில் அவை உயிர் வாழும்.
கடலுக்கு அடியில் இருக்கும்போது நீரின் அழுத்தத்தால் அதனுடைய உடல் சாதாரண மீனைப்போல் தோற்றமளிக்கும்.
ஆனால் அதை மேலே கொண்டு வரும்போது அதனுடைய உடல் அமைப்பு உருமாறிவிடுகிறது.
